ரஜினி, விஜய், அஜித்தை முந்தி படுவேகத்தில் சாதித்த சிவகார்த்திகேயன்..!


ரஜினி, விஜய், அஜித்தை முந்தி படுவேகத்தில் சாதித்த சிவகார்த்திகேயன்..!

ஒவ்வொரு அறிமுக நடிகர்களும் தங்கள் ஆரம்பகாலங்களில் சீனியர் நடிகர்களின் புகழ் பாடி படங்களில் நடித்து வருகின்றனர்.

ரஜினியும் தன் ஆரம்பகால படங்களில் எம்ஜிஆர் பற்றிய சில காட்சிகளை வைத்திருப்பார்.

அதன் பின்னர் ரஜினி பற்றிய காட்சிகளை விஜய் அஜித் இருவரும் தங்களது படங்களில் வைத்திருந்தனர்.

தற்போது அஜித், விஜய் பற்றிய காட்சிகளை வளரும் கலைஞர்கள் தங்கள் படங்களில் வைக்க தவறுவதில்லை.

இந்நிலையில் தெறி படத்துடன் வெளியான ‘யோக்கியன் வாரான் செம்பை தூக்கி உள்ள வை’ என்ற படத்தில் அப்பட நாயகன் சிவகார்த்திகேயனின் ரசிகராக நடித்துள்ளார். இதில் சிங்கம்புலி மெயின் ரோலில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிக்க வந்து ஐந்து ஆண்டுகள் கூட இன்னும் முடிவடையவில்லை.

அதற்குள் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்டோர் நீண்ட காலம் எடுத்துக் கொண்டு சாதித்ததை இந்த குறுகிய காலத்தில் சாதித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.