‘விஜய்தான் பர்ஸ்ட்; தனுஷ் இல்லையாம்…’ உண்மையை உடைத்த ஜிவி பிரகாஷ்.!


‘விஜய்தான் பர்ஸ்ட்; தனுஷ் இல்லையாம்…’ உண்மையை உடைத்த ஜிவி பிரகாஷ்.!

ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் ரசிகர்களின் விருப்பமான நாயகன் யார்? என்ற கருத்துக் கணிப்பை தென்னிந்தியளவில் நடத்தியது.

இதில் தமிழ் ஹீரோக்கள் முறையே தனுஷ், சூர்யா, விஜய், அஜித், விக்ரம் ஆகியோர் வெற்றி பெற்று முதல் 5 இடங்களை பெற்று இருந்தனர்.

தனுஷ் முதலிடம் பிடித்த செய்தியை நாளிதழ் வெளியிட, தனுஷ் அதுகுறித்து மகிழ்ச்சி என ட்வீட் செய்திருந்தார்.

ஆனால் பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் இவரது ட்விட்டர் பக்கத்தில் அந்த செய்தியை மறுத்து, ட்வீட் செய்திருந்தார்.

அவர் விஜய்தான் முதலிடம் பெற்றதாக வந்த மேசேஸ் ஒன்றை ஸ்கீரிட் ஷாட் எடுத்து, அந்த மேசேஸ் ஆதாரம் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இது ஜி.வி. பிரகாஷின் ட்வீட்… @gopin1988 pic.twitter.com/gT8QGIlNS0
இதன் மூலம் உண்மையை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் என்ன காரணத்தினாலோ சற்றுமுன் அந்த ட்வீட்டை நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.