எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் விஜய்சேதுபதி அண்ட் பாபி சிம்ஹா!


எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் விஜய்சேதுபதி அண்ட் பாபி சிம்ஹா!

‘பீட்சா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் ‘ஜிகர்தண்டா’. தனது இயக்கத்தில் வெளிவந்த இரண்டு படங்களின் மூலம் பல பிரபலங்களின் பாராட்டுகளையும் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார். இதுமட்டுமில்லாமல் சீமா, விஜய், விகடன் உள்ளிட்ட விருதுகளையும் அள்ளிச் சென்றார்.

தமிழ்த்திரையுலகின் டிரெண்டையே மாற்றியவர் இவர் என்ற புகழையும் பெற்றுத்தந்தது. தனது தரமான படைப்பின் வழியாக தமிழ் ரசிகர்களின் இதயங்களில் நுழைந்த விட்ட இவர், தற்போது இயக்கி வரும் படம் ‘இறைவி’.  தனது முதல் மற்றும் இரண்டாவது படங்களில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் பாபி சிம்ஹாவுடன் இப்படம் மூலம் மீண்டும் இணைகிறார். இவர்கள் கூட்டணியில் மேலும் ஹீரோவும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா மற்றும் கருணாகரன் ஆகியோரும் நடிக்கவிருக்கின்றனர்.

‘ஜிகர்தண்டா’ படத்தில் பணியாற்றிய கேமராமேன் கேவிமிக்யூரி மற்றும் எடிட்டர் ஆண்டனி இந்த படத்திலும் பணியாற்றுகிறார்கள். கார்த்திக் சுப்புராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் ‘இறைவி’ படத்திற்கும் இசையமைக்கிறார்.

கடந்த வருடம் நடைபெற்ற ஜிகர்தண்டா இசை வெளியீட்டு விழாவில்… “பாரதிராஜா சார் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்ததற்கு அவரின் பிரைன் எனர்ஜிதான் காரணம். அந்த எனர்ஜி கார்த்திக் சுப்புராஜிடமும் இருக்கிறது. நிச்சயமாக  இன்னொரு பாரதிராஜாவாக உருவெடுப்பார்’’ என்று கார்த்திக் சுப்புராஜ் பற்றி எஸ்.ஜே.சூர்யா விழாவில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.