ரஜினி-கமல், அஜித்-சூர்யா வரிசையில் விஜய் சேதுபதி..!


ரஜினி-கமல், அஜித்-சூர்யா வரிசையில் விஜய் சேதுபதி..!

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் ‘காஷ்மோரா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை கோகுல் இயக்கி வருகிறார்.

விரைவில் இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. மார்ச் மாதத்திற்குள் இதன் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் இயக்குனர்.

இந்நிலையில் இவர் அடுத்து இயக்கவுள்ள படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோகுல் இயக்கி விஜய்சேதுபதி, நந்திதா நடித்த ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, மீண்டும் விஜய் சேதுபதி நடிக்க இதன் இரண்டாம் பாகத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

விஸ்வரூபம் ‘கமல்’, எந்திரன் ‘ரஜினி’, பில்லா ‘அஜித்’, சிங்கம் ‘சூர்யா’ உள்ளிட்ட நடிகர்கள் முதல் பாகத்தின் தொடர்ச்சியில் நடித்துள்ளனர். தற்போது இவர்களின் வரிசையில் விஜய் சேதுபதியும் இணைகிறார். குறிப்பிடத்தக்கது.