விஜய் சேதுபதி முடிக்க, யுவன் சங்கர் ராஜா தொடங்கினார்…!


விஜய் சேதுபதி முடிக்க, யுவன் சங்கர் ராஜா தொடங்கினார்…!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இறைவி படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனையடுத்து விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள தர்மதுரை படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

சீனுராமசாமி இயக்கியுள்ள இப்படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ஷிவதா நாயர், ராதிகா சரத்குமார், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளை விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்ட கலைஞர்கள் முடித்துக் கொடுத்துள்ளனர்.

எனவே இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை கோர்ப்பு பணிகளை தொடங்கி விட்டாராம்.

விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

ஸ்டூடியோ 9 சார்பாக இப்படத்தை ஆர் கே சுரேஷ் தயாரித்துள்ளார்.