சிவகார்த்திகேயனை காப்பியடிக்கிறாரா விஜய்சேதுபதி?


சிவகார்த்திகேயனை காப்பியடிக்கிறாரா விஜய்சேதுபதி?

நயன்தாராவுடன் விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து தான் சொந்தமாக தயாரித்து வரும் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ‘ஸ்ட்ரைட்டா போ…’ என்ற பாடலை விஜய்சேதுபதி பாடியுள்ளார்.

இந்நிலையில் வைபவ் நாயகனாக நடிக்கும் ‘ஹலோ… நான் பேய் பேசுறேன்!’ என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ், ‘விடிவி’ கணேஷ், கருணாகரன் ஆகியோர் நடிக்கின்றனர். குஷ்பூ சுந்தர் தயாரிக்க அறிமுக இயக்குனர் பாஸ்கர் இயக்குகிறார் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ புகழ் சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இப்படத்திலும் நடிகர் விஜய்சேதுபதி ஒரு பாடலை பாடிக் கொடுத்துள்ளார்.

தான் நடிக்காத வேறு ஒரு படத்தில் நட்புக்காக ஒரு பாடலை பாடியுள்ளார் விஜய்சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல சிவகார்த்திகேயனும் அனிருத்தும் இணைந்து ‘மாப்ள சிங்கம்’ படத்தில் விமலுக்காக ஒரு பாடலை பாடியிருந்தனர். எனவே சிவகார்த்திகேயன் வழியை பின்பற்றுகிறாரா விஜய்சேதுபதி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.