ரஜினியுடன் மோதும் சிம்பு, ஜீவா, விஜய் சேதுபதி..!


ரஜினியுடன் மோதும் சிம்பு, ஜீவா, விஜய் சேதுபதி..!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கபாலி மே மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இப்படம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

கபாலியை போல் தேர்தல் முடிவுகளுக்காக பல படங்கள் காத்திருக்கின்றன. எனவே மற்ற படங்களும் ரஜினி படத்துடன் மோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கியுள்ள சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, எஸ் ஜே சூர்யா நடித்துள்ள ‘இறைவி’ மற்றும் ஜீவா, நயன்தாரா நடித்துள்ள ‘திருநாள்’ ஆகிய படங்கள் மோதவிருக்கின்றன.