“தர்மதுரை” தலைப்பு விவகாரம்… தனுஷ் தலையீடு?


“தர்மதுரை” தலைப்பு விவகாரம்… தனுஷ் தலையீடு?

ரஜினி படத்தலைப்புகளை தமிழ் சினிமா தாறுமாறாக பயன்படுத்தி வருகிறது. அஜித், தனுஷ், ஜீவா தொடங்கி பாபி சிம்ஹா, சுந்தர் சி உள்ளிட்ட பலரும் தங்கள் படங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் மருமகன் என்ற உரிமையில் படிக்காதவன், பொல்லாதவன், மாப்பிள்ளை, தங்கமகன் என ரஜினியின் தலைப்புகளை பயன்படுத்தியதில் தனுஷ் முன்னிலை வகிக்கிறார்.

தற்போது இந்த லிஸ்ட்டில் விஜய்சேதுபதியும் இணைந்துள்ளார்.

இடம் பொருள் ஏவல் படத்தை தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்திற்கு தர்மதுரை என பெயரிட்டுள்ளனர்.

இது ரஜினி, கௌதமி நடித்து சூப்பர் ஹிட்டடித்த படத்தின் தலைப்பு.

தற்போது இத்தலைப்பை எப்படி விஜய் சேதுபதி கைப்பற்றினார் என்பது தெரியவந்துள்ளது. “நானும் ரௌடிதான்” படத்தின்போது ஏற்பட்ட நட்பைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்காக இத்தலைப்பு குறித்து ரஜினியிடம் பேசினாராம் தனுஷ். தனுஷுக்காக ரஜினியும் ஓகே சொல்லியிருக்கிறார்.

ரஜினியின் பெருந்தன்மையை இன்னும் எத்தனைபேர் தான் வாரிச் சுருட்டிக்கொள்வார்களோ? தமிழ் சினிமாவுக்கே வெளிச்சம்.