ஜெயில் தண்டனையை விட பெரிய தண்டனை… மணிகண்டன் தரும் மெசேஜ்..!


ஜெயில் தண்டனையை விட பெரிய தண்டனை… மணிகண்டன் தரும் மெசேஜ்..!

தனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரித்த ‘காக்கா முட்டை’ படம் தேசிய விருதை பெற்றது. இப்படத்தை மணிகண்டன் இயக்கியிருந்தார். இதனையடுத்து அவர் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள படம் ”குற்றமே தண்டனை”.

விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், நாசர், பூஜா பாலு, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கே.ஆர் பிலிம்ஸ் வெளியிடவுள்ள இப்படத்தை எஸ்.ஹரிஹர நாகநாதன், எஸ்.முத்து, எஸ்.காளீஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர்.

தவறு செய்த மனிதனுக்கு அரசு ஜெயில் தண்டனை தருகிறது. ஆனால் அவன் செய்த குற்றமே அவன் மனதுக்குள் பெரிய தண்டனையாக உருவெடுக்கும் என்பதே இப்படத்தின் மையக்கருவாம்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இவர் அடுத்து மணிகண்டன் இயக்கத்தில் ரித்திகா சிங்குடன் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.