டாப் ஹீரோஸ் ரூட்டில் பயணிக்கும் விஜய்சேதுபதி..!


டாப் ஹீரோஸ் ரூட்டில் பயணிக்கும் விஜய்சேதுபதி..!

வளர்ந்து வரும் நடிகர்களில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படுபவர் விஜய்சேதுபதி.

இவரது பெரும்பாலும் நெகட்டிவ் கேரக்டர்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதில் ரவுடி, குடிகாரன் கேரக்டர்களும் அடங்கும்.

இதனால் இளம் ரசிகர்கள், ரசிகைகள் இருக்கும் அளவிற்கு இவருக்கு தாய்மார்களின் ஆதரவு கிடைக்கவில்லை.

எனவே, இனி வரும் படங்களில் அம்மா, தங்கச்சி செண்டிமென்ட் உள்ள பாத்திரங்களில் நடிக்கவுள்ளாராம்.

ரத்னசிவா இயக்கத்தில் லட்சுமி மேனனுடன் நடித்து வரும் றெக்க படத்தில் தங்கச்சி செண்டிமென்டுக்கு அதிக இடம் கொடுத்திருக்கிறாராம்.

தர்மதுரை படத்திலும் அதிக அம்மா செண்டிமென்ட் உள்ளதாக கூறப்படுகிறது.

அட… விஜய்சேதுபதியும் டாப் ஹீரோக்களின் ரூட்டுக்கு வந்துட்டாரே…!