அரை டஜன் படங்கள்… அசத்த காத்திருக்கும் விஜய் சேதுபதி!


அரை டஜன் படங்கள்… அசத்த காத்திருக்கும் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டின் முதல் பாதி சோதனை காலமாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் ‘நானும் ரௌடிதான்’ என கெத்தாக வலம் வந்தார். காரணம் அப்படத்தின் வெற்றியே. இதனால் தனது அடுத்த படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.

இவர் நடித்துள்ள மற்றும் நடித்து வருகின்ற படங்கள் வருகிற 2016ஆம் ஆண்டில் வெளியாகவிருக்கிறது. எனவே மனிதர், செம ஹாப்பி அண்ணாச்சி என காத்திருக்கிறாராம்.

சீனு ராமசாமி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படம் இவ்வருடமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விரைவில் வெளியாகும் என நம்பிக்கையில் இருக்கிறார். இதில் விஷ்ணு, ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எந்தெந்த படங்கள் என்பதை பார்ப்போமா..?

  •  கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ‘இறைவி’. இதில் விஜய்சேதுபதியுடன் எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கருணாகரன், கமாலினி முகர்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
  •  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ‘மெல்லிசை’. இதில் காயத்ரி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
  •  நலன் குமாரசாமி இயக்கியுள்ள ‘காதலும் கடந்து போகும்’. இதில் சமுத்திரக்கனி மற்றும் ‘ப்ரேமம்’ புகழ் மடோனா செபஸ்டின் ஆகியோர் நடித்துள்ளனர்.
  • அருண்குமாரின் இயக்கியுள்ள ‘சேதுபதி’. இதில் ரம்யா நம்பீசன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேற்கண்ட் படங்களின் இறுதிக் கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சீனு ராமசாமி இயக்கி வரும் ‘தர்ம துரை’ படத்தில் தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவத நாயர் ஆகிய நான்கு நாயகிகளுடன் நடித்து வருகிறார். இப்படமும் அடுத்த ஆண்டில் திரைக்கு வந்து விடும் என கூறப்படுகிறது.

எனவே, ஆறு படங்களை கொடுத்து 2016ஆம் ஆண்டை அதிரடியாய் கலக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. ஹ்ம்… சூப்பர் ஜி. சூப்பர் ஜி.