‘விஜய்சேதுபதியை ஏன் இப்படி காட்டுறீங்க…? – ராதாரவி..!


‘விஜய்சேதுபதியை ஏன் இப்படி காட்டுறீங்க…? – ராதாரவி..!

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய இரண்டு வெற்றிப் படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இறைவி.

ஜூன் 3-ந் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, ராதாரவி, கருணாகரன், காளி வெங்கட் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் செந்தில், கபாலி இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வழக்கம்போல் ராதாரவி பேச எழுந்தபோது பலத்த கரகோஷம் எழுந்தது.

“இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு பச்சை குழந்தை போன்றவர். அவருக்கு திருப்தி ஆகும் வரை நடிகர்களை விடமாட்டார்.

படத்தில் உள்ள ட்ரெயின் ஷாட்டை பார்த்து இனி ஹாலிவுட் கலைஞர்கள் காப்பியடிப்பார்கள். அப்படி ஒரு அருமையான இயக்குனர் அவர்.

விஜய்சேதுபதியின் ஒரு படத்தை சமீபத்தில் பார்த்தேன். நேரிலும் அவரை பார்த்திருக்கிறேன். அவ்வளவு அழகான முகம் அவருடையது. ஷேவ் செய்தால் அழகாக இருக்கிறார்.

ஆனால் எப்பொழும் அவருக்கு முகமெல்லாம் தாடி வைத்த கேரக்டர்களையே கொடுக்கிறார்கள். பாவம்.

அவரின் அர்ப்பணிப்பை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவர் நிச்சயம் ஒருநாள் பெரிய நடிகராக வருவார்.” என்றார்.