தனுஷை தொடர்ந்து அஜித்துடன் இணையும் விஜய்சேதுபதி.!


தனுஷை தொடர்ந்து அஜித்துடன் இணையும் விஜய்சேதுபதி.!

வேதாளத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகிவிட்டது.

சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது நாயகி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதில் முக்கிய வேடத்தில் சந்தானம் மற்றும் கருணாகரன் இருவரும் நடிக்கவிருக்கின்றனர்.

தற்போது இப்படத்தில் உள்ள பவர் புல்லான வில்லன் வேடத்திற்கு விஜய் சேதுபதியை அணுகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள வடசென்னை படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.