‘கபாலி’யால் விஜய்சேதுபதி படத்திற்கு வந்த நிலைமை…?


‘கபாலி’யால் விஜய்சேதுபதி படத்திற்கு வந்த நிலைமை…?

வளரும் இயக்குனர்களில் மிகமுக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் கார்த்திக் சுப்பராஜ்.

ஜிகர்தண்டா படத்தை அடுத்து இவரது இயக்கத்தில் இறைவி படம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து தனுஷ் படத்தை இயக்கவிருக்கிறார்.

இதில் இறைவி படம் மே 20ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது தவிர்க்க முடியாத காரணங்களால் இதன் வெளியீட்டு தேதியை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்துவிட்டார்கள்.

அதற்குள் கபாலி படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டால் என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கிறதுறார்களாம்.

இதனால் மீண்டும் மீண்டும் இறைவி ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை சந்தோஷ் நாராயணன்.