மாதம் 2 படம்; விஜய் சேதுபதியின் ‘தில்’லான முடிவு!


மாதம் 2 படம்; விஜய் சேதுபதியின் ‘தில்’லான முடிவு!

பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர் விஜய் சேதுபதி. இதனால் இவரது அடுத்தடுத்து படங்கள் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியது. ஆனால், அதன்பின்னர் வந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்உள்ளிட்ட படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இதனையடுத்து வந்த புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ மற்றும் ‘ஆரஞ்ச் மிட்டாய்’ ஆகிய படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் பெரிய வசூலை தரவில்லை. எனவே மீண்டும் பழைய பார்முலாவுக்கு திரும்ப காத்திருக்கிறாராம் விஜய் சேதுபதி. எனவே தன் கைவசம் உள்ள படங்களை உடனடியாக முடித்து வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நானும் ரவுடிதான்’ காந்தி ஜெயந்தி ஸ்பெஷலாக வெளிவரவுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் இறுதியிலே சீனுராமசாமி இயக்கத்தில் விஷ்ணுவுடன் நடித்துள்ள இடம் பொருள் ஏவல் படத்தை வெளியிட இருக்கிறார்.

அதன் பின்னர் நவம்பர் மாதத்தில் காயத்ரி மற்றும் ரமேஷ் திலக்குடன் நடித்துள்ள ‘மெல்லிசை’ படம் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து மாத இறுதியில் ‘சூது கவ்வும்’ படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் வெளியாகும் எனத் தெரிகிறது. ஒரு வேளை இது தாமதமானால் இப்படத்தை டிசம்பர் மாதத்தில் வெளியிடவும் அதே மாதத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறைவி’ படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம் இந்த ‘நானும் ரவுடிதான்’ ஹீரோ.