இன்றுமுதல் ‘றெக்க’ கட்டும் ஜோடி…. விஜய் சேதுபதி-லெட்சுமி மேனன்..!


இன்றுமுதல் ‘றெக்க’ கட்டும் ஜோடி…. விஜய் சேதுபதி-லெட்சுமி மேனன்..!

கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு தன் அடுத்த படத்திற்கும் பூஜை போட ஆரம்பித்துவிட்டார் விஜய் சேதுபதி.

ரத்னசிவா இயக்கும் றெக்க படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் லட்சுமிமேனன், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தில் இவர்களுடன் ஹரீஷ் உத்தமன், சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்க உள்ளார். விஜய்சேதுபதியின் நண்பர் கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது.