ரஜினி-கமல் பாணியில் கலக்கும் விஜய்சேதுபதி..!


ரஜினி-கமல் பாணியில் கலக்கும் விஜய்சேதுபதி..!

இப்போது உள்ள ஹீரோக்கள் வருடத்திற்கு ஒரிரு படங்களை கொடுத்து வருகின்றனர். முன்னணி ஹீரோவாக இருந்தாலும், சிலர் இரண்டு வருடங்களுக்கு ஒரு படத்தையே கொடுக்கின்றனர்.

ஆனால் 15-20 வருடங்களுக்கு முன்பு ரஜினி-கமல் உள்ளிட்ட நடிகர்கள் வருடத்திற்கு 10 படங்களை கொடுத்த காலம் உண்டு. கமல் இன்றும் கூட வருடத்திற்கு 3 படங்களை கொடுத்து வருகிறார்.

தற்போது இவர்களது பாணியில் விஜய் சேதுபதியும் சேர்ந்து இருக்கிறார்.

இந்த வருடத்தில் இதுவரை ‘சேதுபதி’ மற்றும் ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய இரண்டு படங்களை கொடுத்து விட்டார். விரைவில் ‘இறைவி’ படமும் வெளியாகவுள்ளது.

மேலும், ‘தர்மதுரை’,‘இடம் பொருள் ஏவல்’,‘மெல்லிசை’,‘ஆண்டவன் கட்டளை’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து ரத்னசிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி – லட்சுமிமேனன் நடிக்கும் “ரெக்கை” படம் வருகிற மே 6ஆம் தொடங்குகிறது. இமான் இசையமைக்க, காமன்மேன் பி.கணேஷ் தயாரிக்கிறார்.

இதுதவிர கே.வி.ஆனந்த் இயக்கத்தில் டி. ராஜேந்தருடன் ஒரு படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒன்று, புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ஒன்று என அடுக்கிக் கொண்டே போகிறார்.

எப்படி பார்த்தாலும் இந்த வருடத்தில் மட்டும் இவரது நடிப்பில் ஆறு-எட்டு படங்கள் வரை வெளியாகும் என்பது மட்டும் நிச்சயம்.