விஜய்சேதுபதி-வரலட்சுமி இணையும் ‘வசந்தகுமாரன்’ மீண்டு வருகிறான்!


விஜய்சேதுபதி-வரலட்சுமி இணையும் ‘வசந்தகுமாரன்’ மீண்டு வருகிறான்!

விஜய்சேதுபதி நடிக்கவிருந்த ‘வசந்தகுமாரன்’ படம் பல காரணங்களால் இத்தனை நாளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இவருக்கும் படத்தின் தயாரிப்பாளர் ‘ஸ்டுடியோ 9′ சுரேஷுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக படம் தொடங்கிய நிலையிலே இருந்தது.

செம்ம ரகளை, எதிரி எண் 3 ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் குமரேசன் இயக்கவிருந்த இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

தற்போது, படத்தின் தயாரிப்பாளர் இப்படத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர் மேலும் மெருகூட்டப்பட்டு அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும்.

கடந்த 2013ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இப்படத்தை தயாரிக்க இருந்ததாக அறிவிப்புகள்  வெளியாகி அச்சமயம் மீடியா உலகில் பரபரப்பை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.

Related