தனுஷை அடுத்து விஜய்சேதுபதியுடன் இணையும் இயக்குனர்..!


தனுஷை அடுத்து விஜய்சேதுபதியுடன் இணையும் இயக்குனர்..!

தனது முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை பெற்றவர் கேவி ஆனந்த். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தார்.

கனா கண்டேன் படம் முதல் இயக்குனராக அவதாரம் எடுத்த இவர், அயன், கோ, மாற்றான் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

கடந்த ஆண்டு வெளியான தனுஷின் அனேகன் படத்திற்கு பிறகு இவரது இயக்கத்தில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் பேண்டஸியான ஒரு புதிய கதைக்களத்துடன் விஜய் சேதுபதியுடன் இணையவிருக்கிறாராம். இதற்கான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கவுள்ளது.

எனவே, இந்த புதிய கூட்டணி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.