பரதன் இயக்கத்தில் விஜய்க்கு ரெண்டு ஜோடியாம்..!


பரதன் இயக்கத்தில் விஜய்க்கு ரெண்டு ஜோடியாம்..!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு நிறைவடையவுள்ளதால், விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்கள் படுவேகமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இதில் இவருக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவர் காஜல் அகர்வால் என்றும் மற்றொருவர் ‘காக்கா முட்டை’ நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

இவர்களைத் தொடர்ந்து ‘அமரகாவியம்’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் நடித்த மியா ஜார்ஜ், விஜய்யின் தங்கையாக நடிக்கவிருக்கிறாராம்.