ரசிகர்களுக்கு விஜய்யின் ‘புலி’ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்


ரசிகர்களுக்கு விஜய்யின் ‘புலி’ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

ஜஸ்ட் ஒரு நாள்… ஒரே நாள் மட்டுமே மீதம் உள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி உலகமெங்கும் ‘புலி’ பாய தயாராகிவிட்டது. பாய்ச்சலை எதிர்கொள்ள திரையரங்குகளும் தயாராகி வருகிறது.

இதனிடையில் ‘புலி’ படத்திற்கு ‘தாகபூமி’ என்ற குறும்பட இயக்குனர் அன்பு ராஜசேகர் தடை கோரியிருந்தார். ஆனால் இவ்வழக்கை அக்டோபர் 7ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். மேலும் தடை பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே தடையின்றி விஜய்யின் ‘புலி’ படம் வெளியாகிறது.

இதன் ட்ரைலர், டீசர் பற்றிய சாதனைகளை பலமுறை பார்த்துவிட்டோம் எனவே மிச்சமுள்ள ‘புலி’ படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை மட்டும் இங்கே தொகுத்து வழங்குகிறோம்…

 

 • இப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் மட்டுமே.
 • விஜய்யின் கண்கள் இப்படத்தில் நீல நிறத்தில் இருக்குமாம். அந்த நீலக்கண்களின் உதவியால்தான் விலங்குகள் பேசுவதை விஜய் புரிந்து கொள்வாராம். மேலும் 2வது ட்ரைலரில் ராட்சத ஆமை ஒன்றிடம் விஜய் ‘ஐயா’ என்று பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
 • விஜய்தான் படத்தின் நாயகன் என்று தீர்மானித்த பின்னர்தான் திரைக்கதை எழுதினாராம் இயக்குனர் சிம்புதேவன்.
 • ஸ்ரீதேவி மட்டும்தான் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். ஸ்ருதிக்கு மூன்று மொழி தெரிந்திருந்தாலும் அவர் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 • படத்தின் முதன்மை நாயகி ஸ்ருதிஹாசன்தான். உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோதும் மலை ஏறும் காட்சிகளிலும் நடித்து கொடுத்தாராம். ஹன்சிகாவுக்கு இதில் இளவரசி வேடம். அவருக்கு மட்டும் மேக்கப் போட மூன்று மணி நேரம் ஆனதாம்.
 • படத்தில் வில்லனாக நடித்துள்ளார் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப். ஆனால் இவருக்கான உடை அணிந்த பிறகு அமர முடியாதாம். எனவே தன் காட்சிகள் முடியும்வரை நின்றுகொண்டே நடித்து கொடுத்தாராம்.
 • சென்னை ஆதித்யா ராம் ஸ்டூடியோ வளாகத்தில் புலி படத்திற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டது. ‘ஜிங்கிலியா’ பாடல் அங்கு எடுக்கப்பட்டதுதானாம்.
 • ராஜமௌலி இயக்கிய ‘நான் ஈ’, ‘மகதீரா’, ‘பாகுபலி’ ஆகிய படங்களை விட ‘புலி’ படத்தில் கிராப்பிக்ஸ் ஷாட்ஸ் அதிகமுள்ளதாம். இதில் மொத்தம் 2,400 கிராபிக்ஸ் ஷாட்ஸ் இருக்கிறது என்கிறார் கமலக்கண்ணன்.
 • படத்தின் ஆக்ஷன் காட்சிகளை போல் காமெடி காட்சிகளும் இணையாக உள்ளதாம். தம்பி ராமையா, சத்யன், ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் காமெடியில் கலக்கியுள்ளார்கள்.
 • இதுவரை இல்லாத பழக்கத்தை விஜய் இதில் கடைபிடித்தாராம். தனக்கான வசனங்களை முந்தைய நாளே இயக்குனரிடம் வாங்கிச் சென்றுவிட்டாராம். காரணம் படத்தில் நிறைய பெரிய நட்சத்திரங்கள் உள்ளதால் தன்னால் படப்பிடிப்பில் எந்தவிதமான தாமதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் இப்படி செய்திருக்கிறார்.
 • மேலும் வாள் சுற்ற பயிற்சியும் எடுத்துக் கொண்டாராம். அப்போதுதான் சண்டைக்காட்சிகளில் ஒரு பயர் இருக்கும் என்றாராம்.
 • இப்படத்தின் நாயகன் நாயகி விஜய், ஸ்ருதி இருவரும் இணைந்து ஒரு டூயட் பாடலை பாடியுள்ளனர். ‘ஏண்டி ஏண்டி’ என்று தொடங்கும் இப்பாடலை தாய்லாந்து மற்றும் கேரளாவில் படமாக்கியுள்ளனர்.
 • முன்பு எல்லாம் தன் படம் குறித்து பேட்டி கொடுப்பார் விஜய். ஆனால் ‘துப்பாக்கி’ படத்திலிருந்து பேட்டியளிப்பதில்லை. இதனால் ‘புலி’ படத்திற்கும் நோ இண்டர்வியூ என்பதில் உறுதியாக இருக்கிறாராம். ஆனால் ட்விட்டரில் உரையாட வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.
 • தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 3,000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் ஜப்பான் மற்றும் சீனாவில் வெளியிடும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
 • கேரளாவில் 200 திரையங்குகளில் வெளியாகவுள்ளதாம். ரஜினியின் ‘லிங்கா’, ஷங்கரின் ‘ஐ’ ஆகிய படங்கள் மட்டுமே இதற்கு முன் 200 எண்ணிக்கையை தாண்டியதாம்.
 • விஜய் ரசிகர்களுக்காக படத்தில் நிறைய பன்ச் வசனங்கள் உள்ளதாம். ‘பாசத்திற்கு முன்னாடிதான் நான் பனி… பகைக்கு முன்னாடி நான் புலி…’ என்ற இந்த பன்ச் வசனமே இதற்கு சிறந்த உதாரணம்.
 • இப்படத்தில் சித்திரக்குள்ளனாக ஒரு கேரக்டரில் விஜய் நடித்திருக்கிறார் என்ற தகவல்கள் வந்து கொண்டே உள்ளன. அதுசரிதான் கொஞ்சம் மிச்சமிருக்கட்டும். படம் வந்தபிறகு பார்த்து கொள்ளலாம்.