யாருக்கு பயந்து விஜய்யின் ‘புலி’ பதுங்குகிறது?


யாருக்கு பயந்து விஜய்யின் ‘புலி’ பதுங்குகிறது?

விஜய்யின் சினிமா கேரியரில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம் ‘புலி’. படத்தைப் போலவே ரசிகர்களின் எதிர்பார்ப்பும் பிரம்மாண்டமாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. பார்வையாளர்களின் எண்ணிக்கையில் இது தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

வருகிற செப்டம்பர் 17ஆம் விநாயகர் சதுர்த்தியன்று இப்படம் வெளியாகும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் இன்னும் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையவில்லை என தெரிகிறது. மேலும் சென்சார் பணிகள் முடிந்தவுடன் படத்தின் வெளியீட்டு தேதியை முறையாக அறிவிக்க இருந்தார்கள். இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் எஸ்.கே.டி ஸ்டூடியோஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் “விஜய்யின் புலி அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, நந்திதா, ரோபா சங்கர், இமான் அண்ணாச்சி, வித்யூலேகா என ஒரு நட்சத்திர கூட்டமே இணைந்துள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க நட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

விநாயகர் சதுர்த்தியன்று ரஜினியின் ‘கபாலி’ பர்ஸ்ட் லுக், அஜித்தின் ‘தல 56’ டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக், பாபி சிம்ஹாவின் ‘கோ-2’ படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.