விஜய்யை மிரட்டும் நாலு பவர்புல் வில்லன்கள்…!


விஜய்யை மிரட்டும் நாலு பவர்புல் வில்லன்கள்…!

பரதன் இயக்கும் விஜய் 60 படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

இன்று விஜய்யின் ஓபனிங் பாடலுடன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதற்கான நடனத்தை தினேஷ் அமைக்கிறார்.

தொடர்ந்து 26 நாட்கள் இடைவிடாது இதன் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறதாம்.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ், அபர்ணா வினோத், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிக்க, வில்லன்களாக ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் ஒப்பந்தமாகி இருந்தனர்.

தற்போது விஜய்யுடன் மோத, ஹரிஷ் உத்தமன், சரத் லோகித்ஸ்வா ஆகிய இரண்டு புதிய வில்லன்களையும் பரதன் ஒப்பந்தம் செய்துள்ளாராம்.