கிராமத்து வீடுகளில் தங்கி பரிசுகளை வழங்கிய விஜய்!


கிராமத்து வீடுகளில் தங்கி பரிசுகளை வழங்கிய விஜய்!

‘ஜில்லா’, ‘கத்தி’ வெற்றிப் படங்களை தொடர்ந்து விஜய் தற்போது நடித்து வரும் படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், நந்திதா, ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், சத்யன், கருணாஸ், தம்பி ராமையா, விஜயகுமார், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மன்னர் காலம் மற்றும் இன்றைய நவீன தொழில்நுட்ப காலம் என இரண்டு காலகட்டங்களில் உருவாகி வருவதாக சொல்லப்படும் ‘புலி’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்த நாள் அன்று வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கும் மேலாக தலக்கோணம் பகுதியில் நடந்தது. சுற்றியுள்ள நகரப் பகுதிகளில் நட்சத்திர ஹோட்டல்கள் இருந்தாலும் அவற்றில் தங்குவேன் என்று அடம்பிடிக்காமல் அந்த கிராமத்து பகுதியிலுள்ள வீடுகளிலேயே தங்கியிருக்கிறார் விஜய்.

ஸ்டார் ஹோட்டல்களில் தங்குவதை விட கிராமத்து மக்களோடு தங்கி பழகியதில் மிக்க மகிழ்ச்சியாம் இளையதளபதிக்கு. எனவே, படப்பிடிப்பை முடித்து விட்டு அந்த இடத்திலிருந்து கிளம்பும் போது, கிராமத்து மக்களுக்கு பரிசுகளை அள்ளி வழங்கியிருக்கிறார் விஜய்.