பட்டைய கிளப்பப் போகும் விஜய், சூர்யா, தனுஷ் ரசிகர்கள்!


பட்டைய கிளப்பப் போகும் விஜய், சூர்யா, தனுஷ் ரசிகர்கள்!

கடந்த ஒரு மாதமாக தீபாவளி கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் ரசிகர்கள் மறுபக்கம் தெறிக்க விட்டு கொண்டிருந்தனர். இவர்களைப் போல் பரமக்குடி நாயகர்களான கமல், விக்ரம் ரசிகர்களும் தங்கள் அபிமான நடிகர்களின் படங்களின் வருகையால் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ரஜினி ரசிகர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். ‘கபாலி’ அறிவிப்பு வந்த நாள் முதல் இணையதளங்களை அதிர வைத்து வருகின்றனர். இதனைக் கண்டு பொறுக்க முடியாமல் விஜய் சூர்யா, தனுஷ் ரசிகர்கள் சற்று திண்டாடி வந்தனர். ஆனால் இந்த திண்டாட்டம் இன்றோடு முடிவுக்கு வரவுள்ளது.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள ‘24’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை நவ. 24ஆம் தேதி வெளியிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து அட்லி இயக்கும் விஜய் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் நவ. 26ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வந்துள்ளன. இத்தகவலை தன் சமூக வலைத்தள பக்கத்தில் அட்லி உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும், வேல்ராஜ் இயக்கத்தில், தனுஷ் தயாரித்து நடித்துள்ள ‘தங்க மகன்’ இசை வெளியீடு நவ. 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எனவே இவ்வாரம் முழுவதும் பட்டைய கிளப்ப காத்திருக்கின்றனர் இவரது ரசிகர்கள்.