‘இனிமேல் தொடர்ந்து செய்வேன்…’ ரசிகர்களுக்கு விஜய் வாக்குறுதி..!


‘இனிமேல் தொடர்ந்து செய்வேன்…’ ரசிகர்களுக்கு விஜய் வாக்குறுதி..!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி கடந்தாண்டு வெளியானது. மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

எனவே நேற்று முன்தினம் ரிலீஸ் ஆன தெறியை ஆவலாக எதிர்பார்த்தனர் விஜய் ரசிகர்கள். படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் “இப்படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றியும் ஆதரவளித்த நல் உள்ளங்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற தரமான படங்களை தொடர்ந்து கொடுப்பேன்’ என ரசிகர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.