ஒரு பக்கம் விஜய்-சூர்யா… மறுபக்கம் விஜய்-அஜித்…!


ஒரு பக்கம் விஜய்-சூர்யா… மறுபக்கம் விஜய்-அஜித்…!

விஜய் நடித்த ‘புலி’, சூர்யா நடித்த ‘மாஸ்’ ஆகிய இரு படங்களும் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. எனவே இவர்களின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள ‘தெறி’ மற்றும் ‘24’ படங்களின் வெற்றியை பெரிதும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்த இருபடங்களும் தமிழ் புத்தாண்டு தினத்தில் (ஏப்ரல் 14ஆம் தேதி) ரிலீஸாகவிருக்கிறது. ஒரு பக்கம் விஜய், சூர்யா படங்கள் ஒரே நாளில் மோதவிருக்கும் நிலையில், மறுபக்கம் விஜய், அஜித் படங்கள் இணைந்தே தொடங்கவிருக்கிறதாம்.

பரதன் இயக்கும் படத்தில் விஜய் அடுத்து நடிக்கவிருக்கிறார். தற்போது இதன் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

அதுபோல் தனது குடும்பத்துடன் லண்டன் சென்று திரும்பிய பின் சிவா இயக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் அஜித். இந்த இரண்டு படங்களும் மே மாத இறுதியில் தொடங்கப்படும் எனத் தெரிய வந்துள்ளது.