கமல், ரஜினி, அஜித்தை அடுத்து விஜய்யுடன் இணையும் தயாரிப்பாளர்.!


கமல், ரஜினி, அஜித்தை அடுத்து விஜய்யுடன் இணையும் தயாரிப்பாளர்.!

‘தெறி’ படத்தை முடித்துவிட்டு, பரதன் இயக்கத்தில் ‘விஜய் 60′ படத்தில் நடிக்கிறார் விஜய். இதன் முதற்கட்டப் பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது.

இதனையடுத்து, விஜய் 61வது படத்தை ஹரி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்த 2017ஆம் ஆண்டில் தொடங்கவுள்ளனர்.

இப்படத்தை நடிகர் பிரபு குடும்பத்திற்கு சொந்தமான சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கமலின் ‘கலைஞன்’, ரஜினியின் ‘மன்னன்’, ‘சந்திரமுகி’, அஜித்தின் ‘அசல்’ ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது விஜய்யுடன் சிவாஜி புரடொக்ஷன்ஸ் இணையவுள்ளது.

அசல் படத்திற்கு இந்நிறுவனம் படங்கள் எதையும் தயாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.