விஜய்யின் ‘தெறி’ நிறுத்தம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


விஜய்யின் ‘தெறி’ நிறுத்தம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இளைய தளபதி நடித்து, அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு இடைவிடாது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை தொடர்ந்து 40 மணி நேரம் படமாக்கினார் அட்லி.

இதனைத் தொடர்ந்து அடுத்த காட்சிகளை படமாக்க இருந்தனர். ஆனால் சிறிது ஓய்வு வேண்டும் என வெளிநாடு பறந்துவிட்டாராம் விஜய். ஏன்? தளபதிக்கு என்னாச்சு என்று பதற வேண்டாம்.

தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட துபாய் சென்றிருக்கிறார் விஜய். எனவே புத்தாண்டு கொண்டாட்டங்களை அங்கே முடித்துவிட்டு பின்னர் மீண்டும் வந்து படப்பிடிப்பில் ‘தெறி’க்க விட இருக்கிறாராம் தளபதி.