‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான் கழட்டு விடுவாங்க…’ அதிர்ச்சியில் கோபிநாத்..!


‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான் கழட்டு விடுவாங்க…’ அதிர்ச்சியில் கோபிநாத்..!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு… இதுபோன்ற நிறைய காதல் தோல்வி பாடல்களை சினிமாவில் பார்த்து இருக்கலாம்.

இதில் தங்களை ஏமாற்றிய பெண்களை பற்றி ஆண்கள் பாடுவதாக இருக்கும்.

இதுபோன்ற பாடல்களுக்கு நிறைய பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது எல்லாம் நாம் அறிந்ததே.

ஆனால் தற்போது நிஜ வாழ்க்கையிலும் பெண்கள் இப்படி ஏமாற்றுபவர்கள் என்பதை நிஜம் என்னும் சொல்லுமளவுக்கு ஒரு ரியால்ட்டி ஷோ நடந்துள்ளது.

விஜய் டிவியில் கோபி நாத் தொகுத்து வழங்கும் நீயா? நானா? நிகழ்ச்சியில் இது தொடர்பான தலைப்பில் விவாதிக்கப்பட்டது.

பெண்கள் கடைசி வரை காதலில் உறுதியாக இருப்பார்களா? அல்லது பெற்றோர்கள் சொல்லும் மாப்பிள்ளையை மணப்பார்களா? என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சி தொடக்கத்தில் காதலில் உறுதியாக இருப்போம் என்ற பெண்கள் ஒரு மணி நேர நிகழ்ச்சி முடிவில், பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றால் காதலனை உதறிவிடுவோம் என்றனர்.

இதை சற்றும் எதிர்பாராத கோபிநாத் முதல் பார்வையாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் போல…