கைகொடுக்காத கோலிவுட்.. கேரளக்கரையோரம் வேஷம் கட்டும் ரம்யா..?


கைகொடுக்காத கோலிவுட்.. கேரளக்கரையோரம் வேஷம் கட்டும்  ரம்யா..?

மோகன்லால், மீனா நடித்து சூப்பர் ஹிட்டடித்த ‘உதயநானு தாரம்’ என்ற தன் முதல் படத்திலேயே கேரள அரசின் விருதை பெற்றவர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.

இப்படமே தமிழில் பிருத்விராஜ், கோபிகா நடிக்க ‘வெள்ளித்திரை’ ஆனது.

இதன்பின்னர் பல ஹிட் படங்களை மலையாளத்தில் இயக்கிய இவர் தமிழில் ‘36 வயதினிலே’ படத்தை இயக்கினார். இப்படம் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்தது.

தற்போது இவர் விஜய் டிவி தொகுப்பாளர் ரம்யா நடிக்க ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறாராம்.

மணிரத்னம் படத்திற்கு பிறகு நாயகி வேஷம் கொட்டோ கொட்டென கொட்டும் என எதிர்பார்த்த அம்மணியின் கதை கேட்கும் கன்டிஷன்களுக்கே கோலிவுட் தலைதெறிக்க ஓட ஆரம்பித்துவிட்டது.

அதனால் கேரளக்கரையோரம் கப்சிப்பென கமிட்டாகியிருக்கிறாராம் ரம்யா. இதில் நாயகியாக வேஷம் கட்டுவார் எனக் கூறப்படுகிறது.

இதுவும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவிருக்கிற படம் என்பது ஹைலைட்!