அஜித் மட்டும் வரல.. விஜய், குஷ்பூ, விஷால் வந்துட்டாங்க..!


அஜித் மட்டும் வரல.. விஜய், குஷ்பூ, விஷால் வந்துட்டாங்க..!

தமிழகத்தில் பெய்த கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாகவும் உதவியவர்களுக்கு நன்றி சொல்வதற்காகவும் நடிகர் விக்ரம் பாடல் ஒன்றை இயக்கி வருகிறார்.

‘தி ஸ்பிரிட் ஆப் சென்னை’ என்று பெயரில் உருவாகி வரும் அப்பாடலை அவரே இயக்கி தயாரித்தும் வருகிறார். ஸ்ரீதர் நடனம் அமைக்க, விஜய்மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, பிரபுதேவா, நயன்தாரா, அமலா பால், வரலட்சுமி உள்ளிட்ட தமிழக நட்சத்திரங்களும்
அபிஷேக் பச்சன், நிவின் பாலி, பிரபாஸ், புனித் ராஜ்குமார் உள்ளிட்ட மற்ற மாநில முன்னணி நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.

தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யும் நடிக்கிறார். இவரோடு குஷ்பூ, விஷாலும் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். ஆனால் முன்னணி நடிகர்களில் அஜித் மட்டும் இதில் நடிக்கவில்லை. அவர் ஆப்ரேசன் முடித்துவிட்டு ஓய்வில் இருப்பதால் கலந்து கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் இந்த பாடலின் படப்பிடிப்பு முடிவடைகிறது.