ரஜினி டைட்டிலுக்காக காத்திருக்கும் விஜய்


ரஜினி டைட்டிலுக்காக காத்திருக்கும் விஜய்

புலி படத்தை தொடர்ந்து தாணு தயாரிப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். அட்லி இயக்கிவரும் இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி, பிரபு, மீனா மகள் நைனிகா, கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் முதன் முறையாக இரண்டு பாடல்களை பாட இருக்கிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கோவாவிலும் அதன்பின்னர் சீனாவிலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்திற்கு ரஜினி நடித்த ‘மூன்று முகம்’ தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதால் சத்யா மூவிஸ் நிறுவனத்திடம் படத்தலைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது . அனுமதி கிடைத்தவுடன் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.