தெறி வெற்றிக்கு நாள் குறித்து சர்ப்ரைஸ் தரப்போகும் ரசிகர்கள்..!


தெறி வெற்றிக்கு நாள் குறித்து சர்ப்ரைஸ் தரப்போகும் ரசிகர்கள்..!

விஜய்யின் ஒவ்வொரு படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. தெறி படத்திற்கு அந்த எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே தென்படுகிறது.

இந்தியளவில் இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் படைத்த சாதனையே இந்த எதிர்பார்ப்பின் முக்கிய காரணம்.

இதனிடையில் இவரது ரசிகர்கள், விஜய்யின் மெழுகு சிலையை அச்சு அசலாக வடிவமைத்துள்ளனர்.

பாடல்கள் வெளியீட்டின் போதே இதை திறப்பதற்காக ரசிகர்கள் அனுமதி கேட்டுள்ளனர். இது தேர்தல் நேரம் என்பதால், அனுமதி தரப்படவில்லையாம்.

எனவே, தெறி படத்தின் வெற்றி விழாவின் போது, மெழுகு சிலையை திறந்து கொள்ள அனுமதித்து விட்டாராம் விஜய்.

இதனால், தெறி படத்தை வெற்றிப் படமாக்கி சிலையை வெறித்தனமாக திறக்கவிருக்கிறார்களாம் தளபதி ரசிகர்கள்.