ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா நடித்த ‘பென்சில்’ பட டீசரை வெளியிடும் விஜய்!


ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா நடித்த ‘பென்சில்’ பட டீசரை வெளியிடும் விஜய்!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘பென்சில்’. இவர் ஹீரோவாக கமிட்டான படம் இதுவென்றாலும், டார்லிங் முதலில் முந்திக் கொண்டது. இதில் இவருக்கு ஜோடியாக இளம் ரசிகர்களின் கனவுநாயகி ‘ஸ்ரீதிவ்யா’ நடித்திருக்கிறார். படத்தின் தலைப்பையும், போஸ்டர்களை பார்க்கும்போதே இது பள்ளிக்கூட காதல் கதையாகத்தான் இருக்கும் என யூகிக்க முடிகிறதல்லவா?.

ஆம் உங்கள் யூகம் சரிதான். ஜப்பானில் படமாகியிருக்கும் இப்படத்தில் இருவரும் பள்ளி மாணவ, மாணவியாக நடித்துள்ளனர். இவர்களுடன் டி.பி.கஜேந்திரன் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர்.  (இவங்கதான் ஜப்பான் பள்ளிக்கூட டீச்சராய் வர்றாங்க போல…)

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ஸ்ரீதிவ்யா.  அதன்பிறகு சுசீந்திரன் இயக்கிய ஜீவா படத்தில் விஷ்ணுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.  இந்த இருபடங்களிலும் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். இருபடங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து தற்போது நடித்து வரும் பென்சில் படமும் வெற்றிப்படமாக அமையும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர். (என்னமா திங்க் பண்றாங்கப்பா?)

மணி நாகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்திருக்கிறார்.  இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசரை கோலிவுட்டின் பிரபலமான இரண்டு நபர்களை வைத்து வெளியிட திட்டமிட்டனர். அதன்படி படத்தின் டீசரை நடிகர் விஜய் வெளியிடவுள்ளார் என்று ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். மற்றொரு நபர் யார்? என்று சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். பென்சில் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டு விழா பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.