மகனுக்கும் ஆதரவு தர விஜயகாந்த் வேண்டுகோள்!


மகனுக்கும் ஆதரவு தர விஜயகாந்த் வேண்டுகோள்!

கேப்டன் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்திருக்கும் ‘சகாப்தம்’ படம் இன்று வெளியாகியுள்ளது. தன் தந்தையை போன்று மிக மிரட்டலான ஸ்டில்கள் கொடுத்து இருக்கிறார் சண்முக பாண்டியன்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நேகா ஹிங்க், சுப்ரா அய்யப்பா என 2 ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், தேவயானி, ரஞ்சித், ஜெகன், சிங்கம் புலி, தலைவாசல் விஜய், பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோரும்  நடித்திருக்கிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் விஜயகாந்தும் நடித்துள்ளார். சுரேந்திரன் இயக்கியுள்ள இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் பிரஸ் ஷோ, சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது. சின்ன கேப்டன் அறிமுகம் ஆகும் படத்திற்கு கேப்டன் வராமல் இருப்பாரா? அவரும் கலந்து கொண்டு ‘சகாப்தம்’ படக்குழுவினருடன் முழுப்படத்தையும் பார்த்தார். இதற்கிடையில் தனது மகனை பத்திரிகையாளர்கள் முன்பு அறிமுகம் செய்து வைத்து சினிமாவில் தனக்கு அளித்த ஆதரவை தனது மகனுக்கும் தர வேண்டும் என கேட்டு கொண்டார்.