தனுஷோடு மோதாமல் கமலோடு மோதும் விஜயகாந்தின் மகன்.


தனுஷோடு மோதாமல் கமலோடு மோதும் விஜயகாந்தின் மகன்.

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் ‘சகாப்தம்’. இப்படத்தின் இசை மிகப் பிரம்மாண்டமான முறையில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்க நடைபெற்றது தாங்கள் அறிந்ததே.

இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு காதலர் தினத்தில் இருக்கும் என்று கூறப்பட்டது. அன்று தனுஷின் அனேகன் படம் வெளியாகவிருந்த நிலையில் அப்படத்தோடு மோதவிருந்தது. ஆனால், தள்ளிக் கொண்டே போன, இப்படத்தின் ரிலீஸ் செய்தி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.  தற்போது, ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, கமல் நடிப்பில் ‘உத்தமவில்லன்’, உதயநிதி நடிப்பில் ‘நண்பேன்டா’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசனுடன் அறிமுக நாயகன் சண்முக பாண்டியனும் களம் இறங்கவிருக்கிறார்.

‘சகாப்தம்’ படத்தில் நாயகிகளாக ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற நேகாவும், ‘மிஸ் பெங்களூர்’ பட்டம் வென்ற சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் சிங்கம் புலி, ஜெகன், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், தேவயானி, ரஞ்சித் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேந்தர் இயக்க, கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார்.