விஜய்யின் புதிய படம் எம்ஜிஆர் படத்தின் ரீமேக்..?


விஜய்யின் புதிய படம் எம்ஜிஆர் படத்தின் ரீமேக்..?

அட்லி இயக்கியுள்ள ‘தெறி’ படத்தை தொடர்ந்து, பரதன் இயக்கத்தில் ‘விஜய் 60’ படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இதில் கீர்த்தி சுரேஷ் இவரின் ஜோடியாக நடிக்கிறார்.

இப்புதிய படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கவிருக்கிறாராம். இவர் ஏற்கெனவே, பரதன் இயக்கிய ‘அழகிய தமிழ் மகன்’ படத்திலும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படம் ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தின் ரீமேக் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் இன்றைய இளைஞர்களின் ரசனைக்கேற்ப இதனை மாற்றம் செய்து அப்படத்தை ரீமேக் செய்யவிருக்கிறார்களாம்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை விஜயா புரடொக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.