தேர்தலில் யாருக்கு ஆதரவு…? அறிக்கை வெளியிட்ட தளபதி இயக்கம்..!


தேர்தலில் யாருக்கு ஆதரவு…? அறிக்கை வெளியிட்ட தளபதி இயக்கம்..!

தமிழகத்தில் கடந்த முறை நடந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார் விஜய்.

அதன்பின்னர் வந்த சில பிரச்சினைகளால் சற்று அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில் இது தேர்தல் சமயம் என்பதால், ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ள கட்சிக்கு விஜய் ஆதரவு கொடுத்து வருகிறார் என்ற செய்தி வெளியானது.

எனவே, இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

“வருகிற 2016 சட்டமன்றத் தேர்தலில் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளது. எந்தக்கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை.

அதேசமயம் ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாக்களிக்கலாம். ஆனால் அவர்கள் விஜய்யின் பெயரையோ கொடியையோ பயன்படுத்தக்கூடாது”

இவ்வாறு அந்த அறிக்கை மூலமாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்கப் பொறுப்பாளர் என். அனந்து தெரிவித்துள்ளார்.