‘தெறி’ வரும் முன்பே தெறிக்க விட்ட விஜய் ரசிகர்கள்..!


‘தெறி’ வரும் முன்பே தெறிக்க விட்ட விஜய் ரசிகர்கள்..!

கடந்த சில வருடங்களாகவே விஜய் நடித்த போக்கிரி, நண்பன், காவலன், ஜில்லா உள்ளிட்ட படங்கள் பொங்கல் தினத்தில் வெளியானது. இதனால் தைப்பொங்கலை போக்கிரி பொங்கலாகவே விஜய் ரசிகர்கள் மாற்றியிருந்தனர்.

ஆனால் இவ்வருடம் விஜய், தன் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து எதையும் தரவில்லை. தளபதி தரலேன்னா என்ன? நாங்களே எங்களுக்கு விருந்து வைப்போம் என்கிறார்கள் இந்த தீவிர ரசிகர்கள்.

கடந்த ஜன. 1ஆம் தேதி திருநெல்வேலியிலுள்ள ராம் திரையரங்கில் புத்தாண்டு சிறப்பு திரைப்படமாக கத்தி படத்தை திரையிட ரசிகர்கள் வலியிறுத்தினர். எனவே, ரசிகர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது

அதுபோல் நேற்றும் சென்னையில் உள்ள வெற்றி தியேட்டரில் கத்தி சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. முதன்முறையாக படம் வெளியானால் என்ன எதிர்பார்ப்பு, கூட்டம் இருக்குமோ? அதை மீண்டும் நேற்று காணமுடிந்தது. விஜய் ரசிகர்கள் தியேட்டரை தெறிக்க விட்டனர்.

இது தளபதியை விட மற்ற நடிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.