அட்லி படம் இப்போ இல்ல; விஜய்யின் அடுத்த மூவ் என்ன?


அட்லி படம் இப்போ இல்ல; விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

‘ஜில்லா’, ‘கத்தி’ வெற்றிப் படங்களை தொடர்ந்து விஜய் தற்போது நடித்து வரும் படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், நந்திதா, பிரபு, ஸ்ரீதேவி, சுதீப், சத்யன், கருணாஸ், தம்பி ராமையா, விஜயகுமார், ஆடுகளம் நரேன் என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.

தேவி ஸ்ரீபிரசாத் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை எந்த படப்பிடிப்பும் நடக்காத லொகேஷன்களில் இப்படத்தின் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்க 40 நடன கலைஞர்களுடன் படக்குழுவினர் கம்போடியா நாட்டுக்குச் சென்றுள்ளனர். விஜய் மற்றும் ஹன்சிகா நடனமாகும் ஒரு பாடல் காட்சி உட்பட சில காட்சிகளை படமாக்கிய பின்னர் சென்னை திரும்ப உள்ளனர்.

இப்படத்தை முடித்தவுடன் அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் வந்த தகவலின் படி விஜய் தன் குழந்தைகளுக்காக அவர்களின் மகிழ்ச்சிகாக தன் நேரத்தை அவர்களுடன் செலவிட விரும்புகிறாராம். எனவே ஒரு மாதம் ஓய்வெடுத்து விட்டு பின்னர்தான் அடுத்த பட வேலைகளில் இறங்குவாராம்.

பாய்ச்சலில் இருந்தாலும் ‘புலி’க்கும் சற்று ஓய்வு வேண்டுமே…