வெளியானது ‘புலி’ படத்திற்காக விஜய் பாடிய பாடல்!


வெளியானது ‘புலி’ படத்திற்காக விஜய் பாடிய பாடல்!

விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியான ‘புலி’ படத்தின் டீஸர் இணைய தளங்களில் டிரெண்டாகி வருகிறது. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், நந்திதா, ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், சத்யன், கருணாஸ், தம்பி ராமையா, விஜயகுமார், ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து உள்ளனர்.

இந்நிலையில் ‘கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன்…’, ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா…’, ‘கண்டாங்கி… கண்டாங்கி…’, ‘செல்ஃபிபுள்ள…’ போன்ற பாடல்களை தொடர்ந்து ‘புலி’ படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார் விஜய். வைரமுத்து வரிகளுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் பாடல் வரிகள் வெளியாகியுள்ளது. பாடல் வரிகளை பார்க்கும்போது அது நிச்சயம் காதல் பாடலாகவே தோன்றுகிறது. படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா இருப்பதால் விஜய்யின் இந்த டூயட் யாருடையது என்பது தெரியவில்லை. இதோ அந்த பாடல் வரிகள்…

வானவில் வட்டமாகுதே… வானமே கிட்ட வருதே…
மேகங்கள் மண்ணில் இறங்கி… தோகைக்கு ஆடை கட்டுதே…
அடி ஏண்டி…ஏண்டி.. என்னை வாட்டுறே…

என்ற பல்லவியுடன் அப்பாடல் தொடங்குகிறது.

நாளை ஜூலை 1ஆம் தேதி முதல் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.