விஜய்க்காக ஒதுங்கிய மம்மூட்டி, அஜித் மச்சினிச்சி..!


விஜய்க்காக ஒதுங்கிய மம்மூட்டி, அஜித் மச்சினிச்சி..!

தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) தினம் போல மலையாள மக்களுக்கு விஷு பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினத்தில்தான், மலையாள வருடத்தின் முதல் மாதமான மேடம் பிறக்கிறது.

எனவே அங்கும் பண்டிகை தினம் என்பதால், நிறைய படங்கள் ரிலீஸ் ஆகும். கடந்த வருடம் மம்மூட்டி, நயன்தாரா நடித்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படம் மட்டுமே வெளியானது.

மெகா ஸ்டாரின் படம் என்பதால் மற்ற படங்கள் ஒதுங்கி கொண்டன.

இந்நிலையில், இவ்வருடமும் விஷு தினத்தில் மம்மூட்டியின் ‘ஒயிட்’ படம் வெளியாவதால் மற்ற படங்கள் தயங்கின. ஆனால் இப்படம் ரிலீஸ் ஆவது சற்று தள்ளிப் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சரி. மம்மூட்டி ஒதுங்கி கொண்டதால், மற்ற படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த்த நிலையில், விஜய்யின் தெறி படத்திற்காக அப்படங்களும் ஒதுங்கி கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இதில் ஜெயராமின் ‘ஆடு புலியாட்டம்’, குஞ்சாக்கோ போபன் மற்றும் அஜித் மச்சினிச்சி ஷாம்லி நடித்துள்ள ‘வல்லியும் தெட்டி புள்ளியும் தெட்டி’ உள்ளிட்ட படங்களும் அடங்கும்.

ஷாம்லி, விஜய்யின் தீவிர ரசிகை என்பது தாங்கள் அறிந்ததே.