விஜய்க்கு தெறியில் 3 கெட்டப் இல்லையாம்… அதுக்கும் மேல..!


விஜய்க்கு தெறியில் 3 கெட்டப் இல்லையாம்… அதுக்கும் மேல..!

விஜய் நடித்துள்ள தெறி படத்தின் பாடல்கள் மார்ச் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இசை வெளியீட்டு விழாவிற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகள் சத்யம் சினிமாஸில் நடைபெற்று வருகிறது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஏஆர் ரஹ்மான் கலந்துக் கொள்ளக்கூடும் எனவும் தகவல்கள் வந்துள்ளன

இதுநாள் வரை வந்த டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விஜய்யின் மூன்று விதமான கெட்டப்பை உறுதிப்படுத்தி இருந்தன.

ஆனால் இப்படத்தில் மேலும் ஒரு கெட்டப் விஜய்க்கு உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது முற்றிலும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் எனத் தெரிகிறது.