தெலுங்கு தெறி எப்படி..? ஒர்க் அவுட் ஆகுமா…?


தெலுங்கு தெறி எப்படி..? ஒர்க் அவுட் ஆகுமா…?

தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது ‘தெறி’. ஆனால் தெலுங்கில் இப்படம் ஒரு நாள் தாமதமாக 15ஆம் தேதியே வெளியானது.

இப்படத்தின் டப்பிங் உரிமையை பெற்ற தில் ராஜு இப்படத்திற்கு போலீஸோடு என்று பெயர் வைத்தார்.

இதன் பொருள் போலீஸ்காரன் என்பதால் மரியாதை குறைவாக இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் வருத்தம் தெரிவித்தன.

எனவே, போலீஸ் என பெயர் மாற்றப்பட்டு, படம் வெளியானது.

தமிழகத்தில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் வசூல் மழை பொழிந்து வருகிறது.

இந்நிலையில் தெலுங்கு தெறி குறித்த தகவல்கள் இப்போது வந்துள்ளன.

அட்லி இயக்கத்தில் படத்தின் மேக்கிங் ஸ்டைலிஷ்ஷாக இருக்கிறது என்றாலும் பார்த்து பழகிப் போன போலீஸ் கதைதான் என கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளதாம்.