ரஜினியை ஆராய்ந்து கற்றுக் கொண்டேன்… ‘தெறி’ கலைஞர் பேச்சு.!


ரஜினியை ஆராய்ந்து கற்றுக் கொண்டேன்… ‘தெறி’ கலைஞர் பேச்சு.!

ஷிவ் மோஹா இயக்கி அஸ்வின், ஷிவதா நாயர் நடித்துள்ள படம் ’ஜீரோ’. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், தயாரிப்பாளர் தாணு, டைரக்டர் மகேந்திரன், அம்மா கிரியேசன்ஸ் சிவா, தனஞ்செயன், ஆரி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இதில் பிரபல இயக்குனரும் விஜய்யின் தெறி படத்தில் வில்லனாக நடித்து வருபவரான மகேந்திரன் பேசினார். அவர் கூறியதாவது…

“நான் லேட்டஸ்ட் படங்களை எல்லாம் பார்த்து விடுகிறேன். பெரும்பாலும் டிவிடியில்தான் பார்க்கிறேன். அந்தப் படங்களின் மதிப்பு அவ்வளவுதான்.

ஆனால் வெற்றிமாறன் இயக்கிய விசாரணையை தியேட்டரில் பார்க்க காத்திருக்கிறேன். அவர் ஒரு மிகச்சிறந்த கலைஞன். வெற்றிமாறனை நூற்றுக்கு பத்து பேராவது பின்பற்ற வேண்டும்.

நான் நிறைய படங்களை பார்ப்பதற்கு ரஜினிதான் காரணம். ஒரு தோல்வியான படம் என்றாலும் அதில் நாம் கற்றுக் கொள்ள ஒன்று இருக்கும். அதில் பணியாற்றிய கலைஞர் ஏதாவது ஒரு வகையில் ரஜினியை கவர்ந்திருப்பார்.

உடனே அவரை அழைத்து அவரது திறமையை ரஜினி பாராட்டுவார். இதை நான் பல வருடங்களாக ரஜினியிடம் ஆராய்ந்து கற்றுக் கொண்டேன்” என்றார்.