டார்லிங் இல்லாமல் தனியாக வரும் விக்ரம் – விஜய்சேதுபதி!!


டார்லிங் இல்லாமல் தனியாக வரும் விக்ரம் – விஜய்சேதுபதி!!

வருகிற அக். 21 திருவிழா கோலம் காணப்போகிறது தமிழ் சினிமா என்ற கனவில் இருந்தனர் ரசிகர்கள். அன்றைய தினம் விக்ரம், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளியாகவிருந்ததால் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தனர். ஆனால் தற்போது அந்த ரேசில் இருந்து ஒரு சில படங்கள் விலகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முதலில் விக்ரமின் ‘10 எண்றதுக்குள்ள’ படம் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தில் விக்ரமுடன் சமந்தா, பசுபதி, ஜாக்கி ஷெராப், சார்மி, சம்பூர்னேஷ் பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் தயாரித்துள்ள ‘நானும் ரவுடிதான்’ படமும் வெளியாவது உறுதி. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர்.ஜே. பாலாஜி, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் படமும், ‘டார்லிங் 2’ என்ற படமும் வெளியாகவிருந்தது. ஆனால் இந்த இரு படங்களும் தற்போது வெளியாகும் சூழ்நிலையில் இல்லையாம். ‘டார்லிங்-2’ படத்தின் தொழில்நுட்ப காரணங்களால் படம் தாமதம் ஆகும் என தெரிகிறது. ‘ரஜினிமுருகன்’ நிலைமையை பலமுறை சொல்லிவிட்டோம் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறோம்.