‘ஐ லவ் யூ’  சொல்லாமல் ரொமான்ஸ் செய்த விக்ரம்!


‘ஐ லவ் யூ’  சொல்லாமல் ரொமான்ஸ் செய்த விக்ரம்!

விக்ரம் நடித்த ‘ஐ’ படம் வெளியாகி கிட்டதட்ட 9 மாதங்கள் ஆகிவிட்டது. எனவே அவரின் அடுத்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த காத்திருப்பு நாளையுடன் முடியபோகிறது. ஆம். விக்ரம் நடித்துள்ள 10 எண்றதுக்குள்ள திரைப்படம் நாளை மறுநாள் (அக். 21) வெளியாகிறது.

இப்படத்தில் சமந்தா முதன்முறையாக விக்ரமுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில் இப்படக்குழுவினர் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசியுள்ளனர். அதில் விக்ரம் பேசியதாவது…

”ஜோதிகா, த்ரிஷாவுக்கு பிறகு சமந்தாவே எனக்கு பொருத்தமான ஜோடியாக நினைக்கிறேன். அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகையாகிவிட்டார். இப்படத்தில் எனக்கும் அவருக்கும் டூயட் கிடையாது. படத்தில் நாங்கள் ஐ லவ் யூ என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் படம் முழுவதும் ஒரு வகையான ரொமான்ஸ் எங்களுக்குள் இருப்பதை நீங்கள் காண்பீர்கள்” என்றார்.

சமந்தா பேசியதாவது… “இப்படத்தில் விக்ரமிற்கு இணையான காட்சிகள் எனக்கும் உள்ளது. நானும் அசராமல் நடித்துள்ளேன்” என்றார்.