விஜய்-சூர்யாவை பின்பற்றும் விக்ரம்-சிம்பு..!


விஜய்-சூர்யாவை பின்பற்றும் விக்ரம்-சிம்பு..!

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இருமுகன் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இதில் நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதனுடன் திரு இயக்கத்தில் உருவாகவுள்ள கருடா படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார் விக்ரம்.

இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் கிரிநந்த் என்பவர் இப்படத்துக்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்கான ஒரு பாடலும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தில் மூன்று விதமான கெட்டப்பில் விக்ரம் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

தெறி படத்தில் விஜய்யும், 24 படத்தில் சூர்யாவும் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளனர். இவையிரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளன.

இவர்களைப் போல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்புவும் மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

தற்போது இந்த வரிசையில் விக்ரமும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.