ரஜினிகாந்த் பட டைட்டில்… தனுஷ் வழியில் விக்ரம்!


ரஜினிகாந்த் பட டைட்டில்… தனுஷ் வழியில் விக்ரம்!

சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த சூப்பர் ஸ்டார் படத்தலைப்புகளை தங்கள் படத்துக்கு வைத்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் தற்போதைய தமிழ் சினிமா ஹீரோக்கள்.

தனுஷின் தங்கமகன், ஜீவாவின் போக்கிரி ராஜா, விஜய்சேதுபதியின் தர்மதுரை, விஷ்ணுவின் வீரா ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது ஒரு புதிய படத்திற்கு ரஜினி படத்தலைப்பை பயன்படுத்தவுள்ளனர்.

இந்த முறை பைரவி என்ற தலைப்பை சீயான் விக்ரம் கைப்பற்றவிருக்கிறார். இப்படத்தை இயக்கவிருப்பவர் திரு. இவர் இதற்கு முன்பே தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். (அட அதுக்கும் தலைவர் பட தலைப்புதானே..)

ஜீவா நடித்த சிங்கம் புலி படத்தை தயாரித்த எஸ்எஸ்எப் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. மற்ற கலைஞர்கள் ஒப்பந்தமானவுடன் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.